சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தது புதிய பதவி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் உட்பட பல்வேறு பதவி நிலைகளை இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (யுபிஎப்ஏ) தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவராக தொடர்ந்தும் சஜித் பிரேமதாச செயற்படுவார். கட்சியின் பொதுச் செயலராக ரஞ்சித் மத்தும பண்டார தொடர்ந்தும் செயற்படுவார்.
பிரதிப் பொதுச் செயலர்களாக நளின் பண்டார,அசோக அபேசிங்க,ரோகினி விஜேரத்ன மற்றும் உமா சந்திரப் பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடசியின் பேச்சாளர்களாக எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் பொருளாளராக ஹர்ஷ டி சில்வா, தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க, துணைத் தேசிய அமைப்பாளராக அலவத்துவல மற்றும் புத்திக பத்திரண ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், ஆறு சிரேஷ்ட துணைத் தலைவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹாஷிம், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், குமார வெல்கம மற்றும் ரவீந்திர சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன.
துணைத்தலைவர்களாக ஹரீன் பெர்னாண்டோ,தலதா அத்துக்கோரள,கயந்த கருணாதிலக,ஹரிசன்,சுஜீவ சேனசிங்க,சந்ராணி பண்டார,திலீப் வெத ஆராச்சி, மற்றும் ஹலீம் நடவடிக்கை தலைவராக ஹரீன் பெர்னாண்டோ நிறைவேற்று அதிகாரி அஜித் பெரேரா
you may like this you