வெற்றிகரமான தலைவரின் பண்புகள் -வெளிப்படுத்திய கோட்டாபய (படங்கள்)
ஒரு தலைவர் தனக்கு கீழ் பணிபுரிபவர்களின் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்காக நேர்மையான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் போது, அந்த அதிகாரிகள் தமது மேலதிகாரிகளுக்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha)தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்படுவது வெற்றிகரமான தலைமைத்துவத்தின் முக்கிய அம்சமாகும் என தெரிவித்த அரச தலைவர், அதனை நடைமுறைப்படுத்துமாறு விமானப்படை வீரர்களை வலியுறுத்தினார்.
விமானப்படையின் கெடட் அதிகாரிகளின் வெளியேறும் அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று (29) காலை இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா முகாமில் அணிவகுப்பு நடைபெற்றது.
70 வருடங்களுக்கு மேலாக தாய்நாட்டிற்கு விமானப்படை ஆற்றி வரும் சேவை மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் தேசிய பாதுகாப்பை பேணுவதற்கும் ஆற்றி வரும் சேவையை அரச தலைவர் பாராட்டினார்.



