கோட்டா கோ கமவின் முக்கிய போராளி கைது!! காவல்துறை வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
கடந்த 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் சட்டவிரோத ஒன்றுகூடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இன்று கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான 'ரெட்டா' என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
வலைஒளியாளரும் சமூக செயற்பாட்டாருமான கோட்டா கோ கம போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ‘ரட்டா’ (Ratta) எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று(30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொம்பனித்தெரு காவல்துறையினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் பெற அழைப்பு
இதேவேளை, குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், சுமார் 2 மணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கிய அவர், இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.