30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை! ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு
curfew
meeting
gotabaya
may end
By Vanan
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் தடை ஏற்படாதவகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்