கோட்டாபயவின் பிரத்தியேக விமானத்திற்கு பணம் செலுத்திய சிறிலங்கா அரசாங்கம்..! உறுதிப்படுத்திய அமைச்சர்

Bandula Gunawardane Gotabaya Rajapaksa Singapore Thailand
By Kanna Aug 16, 2022 11:38 AM GMT
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விமானத்திற்கான பணம் சிறிலங்கா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆம் என பதில் வழங்கியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் அதிபர்களுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன

கோட்டாபயவின் பிரத்தியேக விமானத்திற்கு பணம் செலுத்திய சிறிலங்கா அரசாங்கம்..! உறுதிப்படுத்திய அமைச்சர் | Gotabaya In Thailand Photos Gotabaya Latest Photos

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " அதிபர் தேர்தல் சட்டங்களுக்கமைய, தற்போதைய அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.

முன்னாள் அதிபரும், அவரின் பின்னர் அவரது மனைவியும் அதிபருக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.

முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பெரும் தொகையை செலவு செய்த கோட்டாபய 

கோட்டாபயவின் பிரத்தியேக விமானத்திற்கு பணம் செலுத்திய சிறிலங்கா அரசாங்கம்..! உறுதிப்படுத்திய அமைச்சர் | Gotabaya In Thailand Photos Gotabaya Latest Photos

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 11 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றார்.

இதேவேளை, கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தற்பொழுது தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவை விடுதி வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025