மிக மோசமான தலைவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டாம்! கோட்டாபயவுக்கு அறிவுரை

srilanka colombo politics gotabaya mervin silva
By S P Thas Mar 17, 2022 02:30 PM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் முழு நாட்டை செயலிழக்க செய்துள்ளதுடன் முழு நாடும் கண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் ராஜபக்சவினரை மக்கள் அடித்து விரட்டும் காலம் நெருங்கி விட்டது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நான் ஒரு காணொளியை பார்த்தேன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றதும் பெட்ரோல் இல்லை என்று கூறுகின்றனர். அந்த நபர் அழுதார். கண்களில் கண்ணீர், அவர் இளைஞன். எனது பிள்ளைகள் பட்டினியில் என்றுக் கூறி அழுதார். நானும் 20 ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்தேன். அமைச்சர்களே இவற்றை சென்று பாருங்கள்.

மக்களின் கண்ணீர், கூக்குரல் என்பது ஆட்சியாளர்களுக்கு சபாக்கேடு. இடி இடிக்கும் போது நீங்கள் வெளியில் வர வேண்டாம். முழு நாடும் தற்போது செயலிழந்துள்ளது. முழு நாடும் கண்ணீர் சிந்துகிறது. முழு நாட்டையும் இரண்டு வருடங்களில் அழித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்?

அங்கொடையில் மனநோய் மருத்துவமனை உள்ளது. ஒரு பைத்தியகாரனுக்கு ஓரளவுக்கு பைத்தியம் தெளிந்துள்ளது. இது இப்படி நடக்க வேண்டும், அது அப்படி நடக்க வேண்டும் என இந்த பைத்தியகாரர் கூறுகிறார். அப்போது ஏனைய பைத்தியங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர். அப்படியான ஒன்று நடந்து வருகிறது. வீடுகளுக்குள், காலணி அணியாமல் வெளியில் செல்லாத, மிகப் பெரிய ஞானமுள்ளவர்கள் எனக் கூறியவர்கள், இந்த மண்ணில் கால் வைத்ததில்லை. இவற்றை ராஜபக்சவினர் புரிந்துகொள்ளவில்லை என்று நான் எதுவும் செய்வதற்கில்லை.

நான் வெளியில் இறங்கி இருக்கின்றேன். நான் எவருக்கு பின்னாலும் செல்ல மாட்டேன். தயது செய்து வெளியில் வாருங்கள் என்று நான் மக்களிடம் கோருகிறேன். களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்கி விட்டு, எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்காது முற்றாக என்னை அரசியலில் இருந்து அகற்றும் சூழ்ச்சியை செய்தவர் பசில் ராஜபக்ச. இப்படியும் நன்றி மறந்தவர்கள்.

இன்றைய நாள் போன்ற ஒரு நாளிலேயே புத்த பகவான் நன்றி பாராட்ட கிம்புளத்புரிக்கு சென்றார். பசில் என்ற மனுஷனுக்கும் இது கூட தெரியாது. நாங்கள் இளைஞர்களாக இருந்த போது ஒன்றாக இருந்தோம். அனுர பண்டாரநாயக்கவிடம் நான் இருந்த போது, அவரும் அங்கு இருந்தார். சாப்பிட வழியில்லாமல் எத்தனை பேர் இருக்கின்றனர். வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் பலர் இருக்கின்றனர்.

பால் மா இல்லை. நீங்கள் பால் குடிக்கும் முன்னர் பிள்ளைகளுக்கு பால் மாவை கொடுங்கள். உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் வெளியில். மக்களுக்கு ஒரு பொதி சோறு இல்லை. நாட்டின் மீதுள்ள அன்பு மற்றும் உணர்வு காரணமாக நான் பேசுகிறேன். நடைபாதைகளில் வறிய மக்கள் கஷ்டப்படுகின்றனர். கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்கு வீடுகளில் உள்ள குப்பி விளக்குகளை எரிக்க மண் எண்ணெய் இல்லை.

மிக மோசமான தலைவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டாம் என நான் கோட்டாபய ராஜபக்சவை கேட்டுக்கொள்கிறேன். தவறுகளை திருத்துங்கள். பசில் அன்று மகிந்தவை கைவிட்டு சென்று சென்றது போல், நாட்டை கைவிட்டு, மனைவி மற்றும் பொதிகளுடன் புறபட்டுச் சென்று விடுவார். இந்த நாட்டை விற்பனை செய்து விட்டனர்.

கோட்டாபய ராஜபக்ச அவர்களே தந்தையின் கல்லறை மீது காறி துப்பும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம். இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இந்த நாட்டை காட்டிக்கொடுக்க வேண்டாம். உடன்படிக்கைகளை இரத்துச் செய்யுங்கள். மன்னர்கள் பாதுகாத்த நாட்டை, அமெரிக்க, இந்திய, சீனர்களின் தேவைக்காக காட்டிக்கொடுக்க வேண்டாம் என இறுதியாக கூறுகிறேன்.

கௌரவமான மக்களே வீதியில் இறங்குங்கள். நீங்கள் வீதியில் இறங்கினால், நான் தலைமையேற்பேன். அரச அதிகாரத்தை பிடிப்பதற்காக அல்ல, நாட்டின் ஆட்சியாளர்களின் கண்களை திறக்க செய்ய வேண்டும். பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நானும் அமைச்சராக இருந்தேன். எதனை அவர் மீட்டார்?. அவர் அப்படி நாட்டை கட்டியெழுப்பி இருந்தால், மகிந்த தோல்வியடைந்து கிராமத்திற்கு சென்றிருப்பாரா?

பசில் ராஜபக்ச எதனையும் செய்யக் கூடியவர் அல்ல. கொள்ளையடிக்கவும் தரகு பணம் பெறவும் பணம் சம்பாதிக்கவும் மட்டுமே தெரியும். அவரது அனைத்து செல்வங்களும் அமெரிக்காவில் இருக்கின்றது. அவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அமெரிக்காவுக்கு அவர் சேவகம் செய்கிறார். அவரது திருட்டுப் பணம் அமெரிக்காவில் இருக்கின்றது. அமெரிக்கா பசிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முயற்பட்ட போது, உங்களுக்கு தேவையான அனைத்தையும் தருகிறேன் என சமாதானம் பேசி விட்டு இலங்கைக்கு வந்தார்.

பசில் தன்னை மீறி எவரையும் மேலே செல்லவிட மாட்டார். கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்சவின் பணய கைதியாக மாறியுள்ளார். எனது தம்பி பசிலை நீக்க அனுமதிக்க மாட்டேன் என மகிந்த ராஜபக்ச கூறுகிறார். ஒரு குடும்பத்தின் ஆட்சி நடக்கின்றது.

ருமேனியாவின் சௌசோ சில்வா என்ன நடந்தது, இத்தாலியின் முசோலினிக்கு என்ன நடந்தது வரலாற்றை பாருங்கள். பிரான்சின் லூாயி மன்னர்களுக்கு என்ன நடந்தது. மக்கள் அடித்து விரட்டும் காலம் நெருங்கி விட்டது எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016