எந்த முடிவுகளையும் எடுக்கத் தயங்கமாட்டேன் - கோட்டாபய அறிவிப்பு
srilanka
covid19
corona
media
gotabhaya
By S P Thas
மக்களின் நலனிற்காக எந்த முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்த எந்த விடயத்தையும் ஊடகங்களிற்கு தெரிவிப்பதற்கு முன்னர் தன்னிடம் தெரிவியுங்கள் எனவும் ஜனாதிபதி அரச அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோன வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் அது தொடர்பான விடயங்களை தன்னிடம் நேரடியாக தெரிவிப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிற்கு தெரிவித்து மக்களை அச்சமூட்டுவதற்கு பதில் தன்னிடம் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பான விடயங்களை தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று சுகாதார தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்