மகிந்தவின் தலையீட்டை எதிர்பார்க்கிறேன்! வெளிப்படையாக கூறிய கோட்டாபய
srilanka
colombo
mahinda
gotabaya
politcal
By S P Thas
நீண்காலம் அரசியலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தின் உறுப்பினராக இருந்த போதிலும் தனக்கு தனிப்பட்ட ரீதியில் அரசியல் அனுபவம் குறைவு என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பேசிய அவர்,
அரசியல் அனுபவம் எனக்கு குறைவு என்பதன் காரணமாக 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலையீடுகளை நான் அதிகளவில் எதிர்பார்க்கிறேன்.
அத்துடன் நான் அரச தலைவராக பதவிக்கு வந்த பின்னர், அரசியல் அனுபவங்களை பெற்று வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.