கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியமைக்கு மகிந்தவே பொறுப்பு!
கட்சியை இழந்தமைக்கும், கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியமைக்கும் மகிந்த ராஜபக்ச தான் பொறுப்பெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்சவின் தீர்மானங்கள் தவறானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் மகிந்த ராஜபக்ச உள்ளார். எமது சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை, மகிந்த ராஜபக்ச கட்சியின் கொடியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தமையில் தவறு இல்லை.
மகிந்தவின் தன்னிச்சையான செயற்பாடு

மகிந்த ராஜபக்ச தன்னிச்சையாக கட்சியை மைத்திரிபாலவிடம் ஒப்படைத்தார். அதனால் கட்சியை இழந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ச தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் அவர் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் பொற்காலத்தை உருவாக்கினார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.