சர்வதேச விசாரணையை மறுத்த ரணில்: அவர் தான் சிறந்த தலைவர் என்கிறார் கோட்டாபய
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“அதிபரின் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய அதிபர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கமைய நாடாளுமன்றம் அவரைப் புதிய அதிபராக தெரிவு செய்தது.
நாடாளுமன்றத் தீர்மானங்கள்
ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார்.
இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது.
நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர்” என்றார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி