மக்களிடம் கோட்டாபய விடுத்துள்ள வேண்டுகோள்
அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டால் பழைய குழுக்களை நியமிக்க வேண்டாம் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ(Gotabaya) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு இன்று (10) காலை அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐந்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்யத் தவறியதால் இங்கு வந்தேன்.இரண்டு வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்காதது போல் பேசுகின்றனர்.மக்கள் இந்த முறையை மாற்ற வேண்டும்.பழைய கூட்டத்தை மீண்டும் கொண்டு வராதீர்கள் புதியவர்களை தேடுங்கள். அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை.
நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். முன்னதாக அதிகாரத்தில் இருந்திருக்காதவர்கள் போல் எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுவது கவலையளிக்கிறது.
இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்துக்கான தற்காலத் தேவையாக உள்ளது. தற்கால உலகின் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆளுகை காணப்படுகின்றது.
புதிய தொழில்நுட்ப அறிவின்றி எமது எதிர்காலச் சந்ததியினர் இந்த உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியாது.
அதனைப் புரிந்துகொண்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்காலச் சந்ததியினருக்காக, கல்வியில் உடனடியாக மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.