விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு! சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Attorney General of Sri Lanka Law and Order
By Sathangani Jun 17, 2026 09:29 AM GMT
Report

புதிய இணைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை நாளை (18) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுரேஷ் சலே : குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சிஐடி

ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுரேஷ் சலே : குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சிஐடி

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரோகந்த அபேசூரிய, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு! சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் | Gotabaya S Petition Seeking Protection From Arrest

இந்த விசாரணையின் போது, ​​மேல்முறையீட்டு நீதியரசர் குழாம் , உண்மைகளைச் சரிபார்ப்பதற்காக மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

முதலாம் இணைப்பு

கைதை தடுக்கக் கோரும் கோட்டாபயவின் மனு : நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு தொடர்பில் சட்டமா அதிபர் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமா அதிபர் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனு நேற்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ச!

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ச!

சட்டமா அதிபர்

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  சட்டமா அதிபர் தரப்பில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு! சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் | Gotabaya S Petition Seeking Protection From Arrest

விசாரணையின் போது, ​​தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

மனுதாரரான கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரின் கைது நடவடிக்கையைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

சஹ்ரானை கைது செய்யும் வாய்ப்பை தவறவிட்ட பின்னணி! 2017 இல் கிடைத்த உளவு தகவல்

சஹ்ரானை கைது செய்யும் வாய்ப்பை தவறவிட்ட பின்னணி! 2017 இல் கிடைத்த உளவு தகவல்

மனு மீதான பரிசீலனை

எனினும், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலைதான் பெறப்பட்டதாகவும், பிரதிவாதிகளிடமிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவின் மனு! சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் | Gotabaya S Petition Seeking Protection From Arrest

அத்துடன் எதிர் தரப்பினரிடமிருந்து எந்த அறிவுறுத்தல்களும் இல்லாததால், மனுதாரர் கைது செய்யப்பட மாட்டார் என்று நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளிக்க இயலவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நீதிமன்றம் மனு மீதான பரிசீலனையை இன்று பிற்பகல் வரை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025