அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எழுதிய 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து அவரை வெளியேற்றியது தொடர்பாக 'சதி” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி குறித்த புத்தகமானது கடந்த 07 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த புத்தகத்திலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி
இது குறித்து கோட்டாபய மேலும் தெரிவித்திருந்ததாவது, “இந்த வன்முறைக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்ற கோரிக்கைக்கு அமைய பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனக் கூறி அவர் எனது கோரிக்கையை நிராகரித்தார்.
நடவடிக்கை
இதையடுத்து அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசி பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அவர் தன்னை பிரதமராக நியமிப்பதை பகிரங்கமாக அறிவிக்குமாறும் அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டு அவருக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் உடனடியாக ஏற்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |