ஹிட்லர் சாப்ளின் நடுவே கோட்டாபய- ரில்வின் சில்வா சாடல்
ஹிட்லருக்கும் சாப்ளினுக்கும் இடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊசலாடுகிறார் என ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜேவிபி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, எதிர்க்கட்சியைப் பழிவாங்க ஆணைக்குழுக்களை நியமிப்பது ஒரு சர்வாதிகாரியாக தன்னை மாற்றுவதற்கான முயற்சி என்றும், இது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிராமத்திற்கு வேலை செய்ய ஒரு அரசு இயந்திரமும் அரசியல் இயந்திரமும் இருக்கும்போது ஜனாதிபதி 'கிராமத்துடனான உரையாடல்' என்ற நகைச்சுவையை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். கிராமத்தின் பிரச்சினைகளை தீர்க்க அல்ல, நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கவே ஜனாதிபதி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நாட்டின் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிராமத்திலிருந்து கிராமத்திற்குச் செல்வது ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.