மற்றுமொரு புதிய செயலணியை உருவாக்கினார் கோட்டாபய

srilanka gotabhaya
By Vasanth Apr 10, 2021 08:20 AM GMT
Report

கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மீளாய்வு மற்றும் மக்களுக்கான பயன்கள் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் புதிய “ஜனாதிபதி செயலணி” ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கள், மக்களின் தேவைகளை சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கும் மீள் பரீட்சிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி” என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 15 பேரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, சீத்தா அரம்பேபொல, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கபில அத்துகோரல, சஞ்சீவ எதிரிமான்ன, நிபுன ரணவக்க, சாமர சம்பத் தசநாயக்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, சிவநேசத்துறை சந்திரகாந்தன், சிந்தக்க அமல் மாயாதுன்னே மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க “கிராமத்துடன் கலந்துரையாடல்” கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள், அதனோடு தொடர்பான அவசியமான அனைத்து தகவல்களையும் வழங்கி தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கும் பணிப்புரைகள் மற்றும் உத்தரவுகளை உடனடியாகச் செயற்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் உட்பட பிரதேச ரீதியாக அனைத்து அதிகாரிகளையும் சேவை முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வைப்பது ஜனாதிபதி செயலணியின் அடிப்படை பொறுப்பாகும்.

பிரதேச சபைகள், பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட தேசிய மட்டத்திலான அரசாங்க நிறுவனங்களின் மூலம் 2021 – 2023 வரவுசெலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயற்படுத்தப்படும் வீதிகள், குடிநீர் வழங்கல், மின்சாரம், தொலைபேசி தொடர்பாடல், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், நகர்புற பல்கலைக்கழகங்கள், காணி வழங்குதல், வங்கிகள் மற்றும் நிதி வசதிகள், சந்தைகள், களஞ்சியசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவது செயலணியின் பொறுப்பாகும்.

அரச முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் குறித்த கால எல்லைக்குள் சிறந்த தரத்துடன் விரைவுபடுத்துவது செயலணியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

எந்தவொரு அரச சேவையாளரும் அல்லது அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்களின் அதிகாரி ஒருவர் செயலணி பொறுப்பளிக்கும் கடமையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தல் அல்லது தவறவிடும் சந்தர்ப்பங்களை தமக்கு அறிவிக்குமாறு செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் - என்றுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026