திட்டவட்டமாக மறுத்தது கோட்டாபய அரசு
srilanka
colombo
gotabhaya rajapaksa
By Vasanth
சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசாங்கம் உறுதியாக தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக எரிவாயு விலைகள் திருத்தப்படாததால், சமையல் எரிவாயு நிறுவனம் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலைகள் குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று அமைச்சரவையில் விளக்கமளித்தார்.
இதன்போது எரிவாயு விலை தொடர்பாக விவாதங்கள் நடந்தாலும் எரிவாயு விலையை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஊடகத்திற்கு தெரிவித்தார்.
Tags : #Gotabhaya Rajapaksa #Colombo