இலங்கையின் முடிவால் ஏமாற்றத்தில் இந்தியா! உடனடியாக மஹிந்த கோட்டாபயவை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கையின் முடிவினால் இந்திய அரசு கடுமையான ஏமாற்றத்தை வெளிப்படுத்தக்கூடும் என்று புது டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையை முன்னெடுக்கப்போவதில்லை எனபிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
இது தொடர்பில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி) அபிவிருத்தி செய்வதற்காக, இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை பின்வாங்கிய ஒரு நாள் கழித்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வ வட்டாரங்களை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.