கோட்டாபயவின் புத்தகத்தால் பயனில்லை : மொட்டுக்குள் வெடித்தது எதிர்ப்பு
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எந்த நூல்களை எழுதினாலும் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என தாம் தெளிவாக கூறியதாக பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
‘என்னை வீழ்த்த சதி’என்ற பெயரில் தான் அதிபர் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்டமை தொடர்பில் எழுதிய புத்தகத்தை கோட்டாபய ராஜபக்ச கடந்த 07 ஆம் திகதி வெளியிட்டிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயிரம் நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்தோம்
கோட்டாபய ராஜபக்சவை ஆயிரம் நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். இறுதியாக, சிரியுடன் போ போன்று தலையை தானம் செய்ய ஏற்பாடு செய்தார்.
நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை எத்தனை புத்தகங்கள் எழுதியும் தன் பொறுப்பை அவர் சரியாக நிறைவேற்றவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |