அடக்குமுறை நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்! மைத்திரி கண்டனம்
Galle Face Protest
Maithripala Sirisena
Sri Lankan political crisis
Go Home Ranil
By pavan
சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் நேரத்தில், முப்படையினரின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இணக்கமான பேச்சுவார்த்தையின் கீழ் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது என தான் பரிந்துரைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும் தாக்குதல்

முப்படையினர் இணைந்து காலி முகத்திடல் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து நள்ளிரவில் போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதலும் மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி