பிரித்தானியாவில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புக்கள் : வெளியான தகவல்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் (United Kingdom) வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏழு மாதங்களில் முதன்முறையாக இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, வரி அதிகரிப்பு மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொண்ட போதும் வேலை வாய்ப்புகளில் சிறிய முன்னேற்றம் காணப்படுவதாக சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
“Recruitment & Employment Confederation(REC)” சமீபத்தில் கணக்கெடுத்த அறிக்கை ஒன்றின் படி, பிரித்தானியாவில் மொத்த வேலை வாய்ப்புகள் 1.52 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, வேலைவாய்ப்புக்களில் 7.2 சதவீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒரு சிறிய நம்பிக்கை தருவதாக REC துணை முதன்மை நிர்வாகி கேட் ஷூஸ்மித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
