முல்லை வட்டுவாகல் மக்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
ஸ்ரீலங்காவின் அபிவிருத்திக்காக முல்லைத்தீவு வட்டுவாகல் மக்களும் அரசாங்கத்திற்கு வளைந்து கொடுத்து போகத்தான் வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக ஒரு காணியை அளவீடு செய்ய சந்தர்ப்பம் அமைந்தால் அதனை நிச்சயம் செய்யவே வேண்டும் என்றும் அவர் கூறினார். முல்லைத்தீவு - வட்டுவாகல் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா படையினர் சீனாவுக்கு 600ற்கும் அதிகமான ஏக்கர் காணியை வழங்குவதற்காக அளவீடு செய்ய எடுத்த முயற்சி வட்டுவாகல் பிரதேச மக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களின் போராட்டத்தை அடுத்து நேற்றைய தினம் கைவிடப்பட்டது.
இந்த விடயம் குறித்து கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.
அபிவிருத்திக்காக சாதாரணமாக ஒரு காணியை அளவீடு செய்யவதாயின் நிச்சயம் அந்த நடவடிக்கையை செய்யத்தான் வேண்டும். சில சந்தர்ப்பத்தில் ஊருவரிக எத்தோ ஆதிவாசித் தலைவராக இருநத காலத்திலும் தற்போது அதன் தலைவராக வன்னிலா எத்தோ இருக்கின்ற நிலைமையிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
அதேபோல நாட்டின் அபிவிருத்திக்காக சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆகவே சீனாவுக்கு, இந்தியாவுக்கு கொடுப்பதை விட நாட்டின் அபிவிருத்திக்காக எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வளைந்துகொடுத்து போக வேண்டும். ஆனால் எந்த வகையிலும் எமது அபிவிருத்திக்காக காணிகளை வெளிநாடுகளுக்கு அளிப்பதல்ல.
ஐரோப்பிய நாட்டு சுற்றலாப் பயணிகளை வரவழைப்பது போன்ற சில திட்டங்கள் அபிவிருத்திக்காக உள்ளன. இன்று அரசாங்கத்திட்டங்களை சீர்குலைப்பதற்காக பிழையான கோணங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
அதனடிப்படையில்தான் பணிபகிஷ்கரிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் யாருக்கு நட்டம் ஏற்படுகிறது? ஒருபக்கம் ராஜபக்சவுக்கா அல்லது அமைச்சரவைக்காக? இல்லை. ஒட்டுமொத்த ஸ்ரீலங்காவுக்குமே அதன் தாக்கம் ஏற்படுகின்றது”என்றார்.