தொடரும் வாகன திருட்டு...! மேலும் நால்வர் கைது - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பதினான்கு இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2025.12.12 ஆம் திகதி பிலியந்தல காவல் பிரிவில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருட்டு சம்பவம்
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களும் இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், 23 முதல் 28 வயதுக்கு இடைப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், வாகனங்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வாகன உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |