வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!
வாகன இறக்குமதி மற்றும் அரச சேவைக்கு புதிதாக ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மேற்கொள்ளப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இதனை கூறியுள்ளார்.
2020ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையில் கொரோனை தொற்று பரவியதை தொடர்ந்து, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் நிலை வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து வாகன இறக்குமதிக்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, 2022ஆம் ஆண்டிலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.