தமிழர்கள் மீது மத ரீதியான வன்முறை - மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டு
Kilinochchi
Mavai Senathirajah
Sri Lankan Peoples
By Dilakshan
தமிழர்கள் மீது இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு இப்போது மத ரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று (30) கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் தமிழர்கள் மீது இன ரீதியான ஒடுக்கு முறைகளை மேற்கொண்ட பேரினவாத அரசு இப்போது மத ரீதியான வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது என அவர் கூறுகிறார்.
உறுப்பினர்கள்

அத்துடன் அங்கு, இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை நிர்வாகத் தெரிவில் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட கிளை நிர்வாகத்தினர் எனப் பலரும் வருகைதந்திருந்தனர்.