யாழில் கோர விபத்து! விளையாட்டு போட்டிக்காக சென்ற அரச அதிகாரி உயிரிழப்பு
Sri Lanka Police
Accident
Death
By pavan
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாடசாலை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்