அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : புதிய அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தகவல் வெளியிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு குறித்து வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (01) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சம்பள உயர்வு குறித்த தீர்மானம்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான சம்பள உயர்வு சாத்தியமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
எந்த மட்டத்தில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் பல கட்டங்களில் அதிகரிப்பு செய்யப்படுமா என்பதும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.
எனினும், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |