அரச மருத்துவ கல்லூரிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையை இல்லாதொழிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சில் இன்று(11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளாவிய ரீதியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்டால், அரச மருத்துவக் கல்லூரி முறைமை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வீழ்ச்சி
அத்துடன், 3 மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரசாங்க மருத்துவக் கல்லூரி அமைப்பு ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வருவதாக கொழும்பில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.