அரசின் பத்து பங்காளி கட்சி தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானம்
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்துடன் இணைந்துள்ள பத்து கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) தலைமையகத்தில் நடைபெற்ற அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை நாளையதினம் அரசதலைவர் மற்றும் பிரதமரிடம் கையளித்த பின்னர் அதனை பகிரங்கப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டின் உண்மை நிலையை மக்களிடம் மறைக்காமல் மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துரலிய ரத்ன தேரர்(Athuraliye Rathana Thero), நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Udaya Gammanpila), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), அமைச்சர்களான வீரசுமண வீரசிங்க(Weerasumana Weerasinghe), டிரான் அலஸ்(Tiran Alles), கெவிந்து குமாரதுங்க(Gevindu Kumaratunga), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க(Dr. G. Weerasinghe) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
