யாழ்ப்பாணத்தில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் தொழிற் சந்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மாபெரும் தொழிற் சந்தையானது எதிர்வரும் 2025.03.08 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இத்தொழிற்சந்தை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள். கணக்கியல்துறை, ஹோட்டல்கள், காப்புறுதித்துறை, ஆடைத் தொழிற்சாலை, பாதுகாப்புச்சேவை.
மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்பு
மற்றும், தாதியர் வேலைவாய்ப்பு, கணனித்துறை, தொழிற்பயிற்சி நெறிகள், ஹோட்டல் முகாமைத்துவம், சுயதொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வருகை தரவுள்ளதுடன் தங்கள் நிறுவனத்தில் காணப்படும் 500 இற்கு மேற்பட்ட வெற்றிடங்களுக்காக அன்றையதினமே நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளன.
மேற்படி தொழிற்சந்தை நிகழ்வில் தொழில்தேடும் இளையோர்கள் தங்களது தகமைகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் கலந்துகொள்வதன் மூலமாக தமக்குப் பொருத்தமான தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே தொழில் வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ளக்கூடிய இவ்வாய்ப்பினைப் பயன்டுத்தி பயனடையுமாறு யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு 0212219359 என்ற தொலைபேசியூடாக தொடர்புகொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் - கஜந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
