ராஜபக்சர்களின் அரசாங்கம் பூஜ்ஜியம் - எதிரணிகள் சேர்ந்தால் தக்க முடிவினை எடுப்போம்!.. சுமந்திரன் பதில்
மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் மீதிருந்த செல்வாக்கு இப்பொழுது பூஜ்ஜியமாகி விட்டது என்றும் அவர்களினால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல் இன்று நாடு பெரியதொரு சிக்கலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
எதிரணிகள் எல்லாம் சேர்ந்து செயற்பட்டால் அது குறித்து சரியான முடிவை தக்க நேரத்தில் எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
* உள்ளூராட்சி சபைகளின் ஆளுகைக் கால நீடிப்பு ஒரு ஜனநாயக விரோத செயல்...
* தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை நீடிக்க முடியாது. அது முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும்...
* 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்கிற கடிதம் என்று சொல்வது தவறு...
இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர்களின் வினாவிற்கு வழங்கிய முழுமையான பதில் காணொளியில்,