அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Dr Ramesh Pathirana
Government Employee
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
Job Opportunity
By Kathirpriya
அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதிகளவான அரச ஊழியர்கள்
"இலங்கையில் ஏற்கனவே அதிகளவான அரச ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
சனத்தொகை விகிதாசாரத்தில் உலகிலேயே அதிகளவான அரச ஊழியர்களைக் கொண்ட நாடாகவும் இலங்கையே விளங்குகிறது.
அவசியமற்ற செயல்
இதனால் மேலதிகமாக அரச ஊழியர்களை உள்வாங்குவது அவசியமற்றது" என அமைச்சர் தெரிவித்தார்.
இதனால் அரச சேவையை மேலும் விரிவுபடுத்துவது அவசியமற்ற செயல் என்றும் அதனை செய்ய முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி