தொடரும் பாராமுகம்: வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் குற்றச்சாட்டு
நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடு தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தால் நேற்று (26) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 25 நாட்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் (University of Jaffna) உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள முரண்பாடு
இந்நிலையில், அனைத்து பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைமையில் கடந்த 02.05.2024 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் நீண்ட நெடுங்காலப் பிரச்சினைகள் தொடர்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, 2016ஆம் ஆண்டிலிருந்தே பல கட்ட கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருவதாக குறப்படுகின்றது.
மாற்றாந்தாய் மனப்பான்மை
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அளவுக்கதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டும், இதுவரை தீர்வு எதனையும் வழங்காமல் தங்கள் கோரிக்கைகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகப்படுவதாகவும் மற்றும் பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமே இப்பாராமுகம் என நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
மேலும், ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு இனியும் தாமதிக்காமல் உரிய தீர்வை வழங்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோ என கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |