பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: தேர்தல்கள் ஆணைக்குழு அம்பலப்படுத்திய தகவல்
இலங்கையின் பொதுத் தேர்தலை (General election) இந்த ஆண்டில் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
ஆனாலும், அதிபர் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Rathnayake) தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
அத்துடன் இந்த ஆண்டில் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிதியானது முழுக்க முழுக்க அதிபர் தேர்தலை நடத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிபரினால் மட்டுமே இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |