தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் மனு கையளிப்பு
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (20.01.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
காணி விடுவிப்பு
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை அன்மையில் முன்னெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட சுமார் 2500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க கையளிக்கும் முகமாகவும் ஆளுநருக்குரிய மனுவை கையளித்து காணியை விடுவிக்க கோரும் முகமாகவும் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |