இந்தியாவுக்கு கனவாகவே மாறும் கச்சத்தீவு: முக்கிய நகர்வில் அநுர அரசு
அண்மைய சில நாட்களாக இந்தியா (India) மற்றும் இலங்கையில் பாரிய பேசுபொருளுக்குள்ளாகி இருக்கும் முக்கிய விடயங்களில் ஒன்று கச்சத்தீவு விவகாரம்.
கடந்த 22 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் (Madurai) இடம்பெற்றிருந்த போது அதில் கச்சத்தீவை இந்தியாவுக்கு பெற்றுகொடுக்குமாரு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் (Vijay), நேரடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
இதையடுத்து, குறித்த விடயம் தீயாய் பரவிய நிலையில் இந்திய மற்றும் இலங்கை ஊடகங்களில் பாரிய பேசுபொருளுக்கு உரிய விடயமாக மாறியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை அரசும், எந்தவொரு காரணத்திற்காகவும் கச்சைத்தீவை யாருக்கும் விட்டு தரமாட்டோம் என்ற அடிப்படையில் உறுதியாக தமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்து.
இவ்விடயத்தை கடந்த முதலாம் திகதி யாழில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) குறிப்பிட்டிருந்ததுடன் முதல் முறையாக கச்சத்தீவுக்கு விஜயமொன்றையும அவர் மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் முன்மொழியப்பட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு, கச்சத்தீவை சுற்றுலாப்பயணத்துறையாக விஸ்தரித்தால் அது அனைத்துலக பார்வைக்கு வந்துவிடும் ஆகையால் இந்தியாவிற்கு கச்சத்தீவை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு ஒரு போதும் கிடைக்காது என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கச்சத்தீவு தொடர்பிலும், இலங்கை மற்றும் இந்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும், இந்திய மற்றும் இலங்கையின் அரசியல் தொடர்பு குறித்து, ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பின்னணி தொடர்பிலும் மற்றும் நாட்டின் நடப்பு அரசியல் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
