ஊடக அடையாள அட்டைகள் வழங்கல் நிறுத்தம்: வெளியான அறிவிப்பு
அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகள் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் ஏராளமான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் மற்றும் சில ஊடக நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் விண்ணப்பித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அட்டைகள்
குறித்த விடயத்தை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த ஆண்டு விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும் மற்றும் முன்னர் அட்டைகளைப் பெற்ற அதிகாரிகளுக்கு இந்த முறை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, இந்த வருடம் வழங்கப்பட்ட மொத்த ஊடக அடையாள அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது 2024 இல் வழங்கப்பட்ட 8,100 அட்டைகளில் பாதிக்கும் குறைவானது என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஊடக அடக்குமுறை அல்ல எனவும் அவர் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்