அரசாங்கத்தினால் அச்சிடப்பட்ட பணம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்
அரசாங்கம் அதிகளவான பணம் அச்சடித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் சாதாரணமாக பணம் புழக்கத்திற்கு மத்திய வங்கியால் பணம் விடப்படும். அவ்வாறான ஒரு செயற்பாடே நடைபெறுகிறது.
பணவீக்கம் அதிகரிப்பு
அரசாங்கம் எக்காரணம் கொண்டும் பணம் அச்சடிக்கவில்லை. கடந்த அரசாங்கத்தால் பணம் அச்சடித்து அதிகமாக செவழித்ததாலே நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க காரணமானது.
எமது அரசாங்கம் அதை செய்வதற்கு எப்போதும் முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகவே நாம் இவ்வாறான பிரச்சினைகளை நோக்குகின்றோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 21 மணி நேரம் முன்
