அநுர அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளும் ரில்வின்: ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
நாட்டின் பரிமாண மாற்றத்திற்கான பல முக்கிய தீர்மானங்களை ஒரு வருடகாலத்தில் எடுத்துள்ளோம்.அதில் நாம் பெரும் மகிழ்ச்சி கொள்வதோடு திருப்தியும் காணப்படுவதாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஒரு வருடம் பூர்த்தியடையந்துள்ளது.ஒரு வருடத்தில் அரசாங்கத்தின் பயணம் மற்றும் ஏற்பட்ட தடைகள் தொடர்பில் தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கலாசாரம்
அதில் தொடரந்துரையாற்றிய அவர், “கடந்து வந்த ஒரு வருடத்தில் எமக்கு பெரும் சவால்கள் இருந்தன.அதிகம் முயற்சித்தோம்,ஒரு வருடம் கடந்தது தெரியவில்லை.வேகமாக சென்றுள்ளது.
நாங்கள் இந்த நாட்டில் பொருளாதாரம் மற்றும் சமூக,கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவதே வாக்குறுதியாகும்.அதை சுலபமாக செய்துவிட முடியாது.நடைமுறையில் இருந்த பழைமையை மாற்ற முற்படும் போது அதன் தாக்கங்கள் பலமாக இருக்கும். அதற்கு முகம் கொடுத்தே முன் செல்ல வேண்டியுள்ளது.
எமது முதல் படிமுறையான புதிய அரசியல் கலாசாரம் ஆதாவது, மக்கள் பணத்தை வீணடிக்காத, ஊழல் மோசடி,நெருக்கமானவர்களுக்கு வரப்பிரதாசம் வழங்கல் ஆகியவற்றில் பாரிய மாற்றம் நிகழ்ந்துள்ளன்.
அர்ப்பணிப்புள்ள அரசாங்கம்
ஜனாதிபதி முதல் அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஊழலற்ற, கப்பம் பெறாதவர்களாக உள்ளனர்.அதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
அரசியல் வாதிகளின் வரப்பிரசாதங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.சாதாரண அரசியல் வாதிகளாக உள்ளனர்.2048 ஆம் ஆண்டே நாட்டை மாற்ற முடியும் என சொன்னார்கள்.ஆனால் நாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம் மேலும் பல நிவாரணங்களை செய்துள்ளோம்.
அரசாங்கத்தின் செலவுகளை குறைத்து அர்ப்பணிப்புள்ள ஒரு அரசாங்கம் என்பதை காட்டியுள்ளோம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
