புத்தாண்டு காலத்தில் முந்திரி பருப்புக்கு அதிக கேள்வி
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Dharu
புத்தாண்டு காலத்தில் முந்திரி பருப்புக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியாத நிலை இருப்பதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் உள்ளுராட்சி சபைகளுக்கு உட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் தொன் முந்திரி தேவை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் விற்பனை நிலையங்களில் 4000 - 5000 ரூபாய் வரை விற்கும் ஒரு கிலோ முந்திரி விலை கூட்டுத்தாபனத்தால் 3000 முதல் 3500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உயர்ரக முந்திரி விற்பனை
மேலும், சில பகுதிகளில், உடைந்த முந்திரி துகள்களை, பல வகையான பசைகளை பயன்படுத்தி ஒட்டப்பட்டு, முழு முந்திரியாக விற்பனை செய்வதால், உயர்ரக முந்திரி விற்பனை வீழ்ச்சி அடைவதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி