அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள பெப்ரல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான (2024 Sri Lanka elections) அஞ்சல்மூல வாக்களிப்பு முன்னதாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு (PAFFREL) கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த விடயத்தை ஆராயுமாறு வலியுறுத்தி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையகத் தலைவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.
குறித்த கடித்தில், “அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அதுவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறித்தே, தாம் அதிருப்தி அடைகின்றோம்.
பெப்ரல் அமைப்பு
சில மாதங்களுக்கு முன்னர், அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கோரியபோது, அரசாங்கம் எப்படி முழுக் கண்மூடித்தனமாக இருந்தது.
அரசாங்கத்தின் தற்போதைய சம்பள உயர்வு அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும்போது மாதத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் மேலதிக செலவு ஏற்படும்.
எனினும், நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் இந்த முடிவின் சாத்தியக்கூறு குறித்து கேள்வியெழுப்புகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |