305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல்! அரசாங்கத்தின் துரித நடவடிக்கை
2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 13 முதல் ஜூலை 17 வரையான நான்கு நாட்களுக்குள் இந்த மொத்த அளவும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
இதில் அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை
இந்த சிறுபோக நெல் கொள்முதல் திட்டமானது கடந்த ஜூலை 13 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாயிகளின் வசதிக்காக பிரதான அறுவடைப் பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை திறந்து வைத்துள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவாத விலையின் கீழ், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட இந்த விலை திட்டத்தின் கீழ், தற்போது நாடு முழுவதும் உள்ள 143 நெல் கொள்முதல் மையங்களில் இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 1 மணி நேரம் முன்