மின் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்யும் முடிவு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "மின்தடையை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை. இது ஒரு அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
மின்சார சபையை மறுசீரமைத்தல்
எனவே, தயவுசெய்து தொடருங்கள், வேலை செய்ய முடியாவிட்டால் இழப்பீடு பெற்றுச் செல்லலாம்.
ஆனால் இந்த பணியைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும். இந்த சீர்திருத்தங்களைச் செய்யாமல் முன்னேற முடியாது
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்காவிட்டால் இலங்கை நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்“ என அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
