அமைச்சர் பந்துலவின் மனைவிக்கும் கொவிட்!
Corona
Bandula Gunawardane
SriLanka
By Chanakyan
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பந்துலவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொது மக்களை முகக் கவசங்களை அகற்ற வேண்டாம் என்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுமாறும் அமைச்சர் பந்துல தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.