தபால் ஊழியர்கள் வேறு வேலையை பார்க்கலாம் :கடும் இறுக்கத்தில் அநுர அரசு
தபால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட மேலதிக வேலை நேரத்தை அதிகரிப்பது மற்றும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது போன்ற கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
வேறு வேலைகளைப் பார்க்கலாம்
தபால் துறையில் போதுமான மேலதிக நேரம் இல்லாத மற்றும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்த விரும்பாத ஊழியர்கள் வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த கோரிக்கைகள் ஒருபோதும் வழங்கப்படாது என்ற கடுமையான கொள்கையை அரசாங்கம் கொண்டுள்ளது என்றும், இந்த நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
