தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - வெளியானது யாழ்ப்பாணத்தின் வெட்டுப்புள்ளி
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் ( https://www.doenets.lk ) சென்று பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.
தமிழ் மொழி மூல பாடசாலை
அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்காக 134 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்காக யாழ்ப்பாணம், நுவரெலியா, அம்பாந்தோட்டை, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளியாக 132 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார், திருகோணமலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான பாடசாலைக்களுக்கான வெட்டுப்புள்ளியாக 131 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வெட்டுப்புள்ளிகள்
அந்தவகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகள் கீழே தரப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இதன்படி இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
