இன்றுமுதல் களப்பணியிலிருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்
கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து களப் பணிகளிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளனர்.
பயணச் செலவுகளுக்குப் போதுமான எரிபொருள் படி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றாவிடின் சுகவீன விடுமுறைப்போராட்டம்
இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில், கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், 30ஆம் திகதியன்று சுகவீன விடுப்பு எடுத்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

கிராம நிலதாரிகள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளைத் திறம்பட ஆற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் படிகளையும் வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |