அமெரிக்காவிலுள்ள பேர்த்தியுடன் சிறிலங்கா அரச தலைவர் வெளியிட்ட படம்!
எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான ஒளிப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அந்தப் பதிவில்,
அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோது தான் எமது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பேருவகை தந்த பாக்கியத்தை நாம் பெற்றோம்.
எமது மகன் மனோஜ் (Manoj) மற்றும் மருமகள் செவ்வந்தி (Sevvanthi) ஆகியோர் பெற்றோர் என்ற மாண்பினை அடைந்தமைக்கு அவர்களை வாழ்த்தியதோடு தாத்தா என்ற பெருமைமிகு மேன்மையை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றிகளையும் கூறினேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டுக்குச் சென்று இன்றுக் காலை நாடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
