கிராண்ட்பாஸில் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Death
By Sindu
கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில், மூன்று மாடி கொண்ட வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த சிறுமி சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |