பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்
பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ், இன்று(28) உக்ரைனுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் குளிர்காலத்துக்கு முன்னர் உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் தீவிரமாக விவாதித்தாக தெரியவருகிறது.
உக்ரைனுக்கான திடீர் பயணம்
தெற்கு உக்ரைனில் கடந்த இரவு ரஷ்யா கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையிலும், உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய முறைகேடுகள் குறித்த செய்திகளின் பின்னணியில் பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ், இன்று உக்ரைனுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்ட வெற்றிக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ஜெர்மனியில் ரணில் இடித்துரைப்பு
உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிய நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது புதிதாக உக்ரைனுக்கு பாதுகாப்பு துணை அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
உக்ரைனிய இராணுவத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளைத் தொடர்ந்து இந்தத் தலைமை மாற்றங்கள் உருவாக்கப்படும் நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் இந்த திடீர் பயணம் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் குளிர்காலத்துக்கு முன்னர் உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் கிரான்ட் ஷாப்சும் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் முக்கியமாக பேச்சுக்களை நடத்தியததக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, பிரித்தானியா வழங்கும் ஒத்துழைப்பால் உக்ரைனிய இராணுவம் போர்க்களத்தில் தனது திறமைகளை கணிசமாக விரிவுபடுத்தி வருவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
வாக்னரின் துருப்புகள் மீண்டும் போர்க்களத்திற்கு
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் உக்ரைனிய பயணத்தின் பின்னணியில் ரஷ்யாவின் தனியார் இராணுவக் கட்டமைப்பான வாக்னரின் துருப்புகள் மீண்டும் உக்ரைனிய போர்க்களத்திற்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டில் இருந்து வாக்னர் துரப்புகள் வெளியேறிய பின்னர் அந்த பகுதியின் கட்டுப்பாட்டை ரஷ்ய இராணுவம் எடுத்த நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் பாக்முட் களமுனைக்கு திரும்பியதாக தெரிகிறது.
வாக்னர் தலைவர் பிரிகோஜின் மர்மமான விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் ரஷ்ய இராணுவத்துக்கு உள்ளே வாக்னர் துருப்புக்களை உள்வாங்கும் முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.