150 பேரை காவுவாங்கிய பெரும் துயரம்! கண்டியில் தேடப்படும் 50 குடும்பங்கள்
கண்டி – மாத்தளை வீதியில் அமைந்துள்ள அலவத்துகொடை ரம்புக்கெளப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இலங்கைக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த (29.11.2025) அதிகாலை 1.00 மணியளவில் குறித்த நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கும்புர – அலவத்துகொடை வீதியை ஊடறுத்து ஏற்பட்ட இந்த பேரழிவு காரணமாக முழுக் கிராமத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
50 குடும்பங்கள்
சுமார் 50 குடும்பங்கள் வசித்த முழுக் கிராமமே மண் சரிவுக்குள் புதைந்து காணாமல் போயுள்ளது.

இதுவரை சிலரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 150 பேர் வரை காணாமல் போயிருக்கின்றனர்.
உறக்கத்தில் இருந்த மக்கள், அவர்கள் மீது பாறைகளும் மண்மேடுகளும் சரிந்து விழும் என்பதைக் கனவிலும் எதிர்பார்க்கமாட்டார்கள் தொடர்ச்சியான கடும் மழையால் பிடிமானம் இழந்த மண், வீடுகள் மீது சரிந்து வந்து அனைத்தையும் முழுமையாக சிதைத்துள்ளது.
உள்ளே இருந்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள், நோயாளர்கள் என யாரும் தப்பிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரால் தளர்ந்து வீழ்ந்த மண்மேடுகள் வீடுகளை முழுவதுமாக மூடி புதைந்த நிலையில் இன்றும் மீட்புபணிகள் தொடருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |